/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனுக்கு தொந்தரவு வாலிபருக்கு '‛போக்சோ'
/
சிறுவனுக்கு தொந்தரவு வாலிபருக்கு '‛போக்சோ'
ADDED : பிப் 17, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை, நீலாங்கரையைச் சேர்ந்த 14 வயது சிறுவன், உறவினர் வீட்டில் வளர்ந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஹரீஸ், 24, என்பவர், சிறுவனிடம் பழக்கமாகி உள்ளார்.
நேற்று முன்தினம், சிறுவனை தனியாக அழைத்து சென்ற ஹரீஸ், சிறுவனை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இது குறித்து சிறுவன், உறவினர்களிடம் கூறினார். அவர்கள், ஹரீசை சரமாரியாக தாக்கி, நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, ஹரீசை கைது செய்தனர்.