தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுமியிடம் அத்துமீறல் :இருவருக்கு 'போக்சோ'

 சிறுமியிடம் அத்துமீறல் :இருவருக்கு 'போக்சோ'

 சிறுமியிடம் அத்துமீறல் :இருவருக்கு 'போக்சோ'


ADDED : மார் 31, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 31, 2026 07:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தரமணி: பத்து வயது சிறுமியிடம் அத்துமீறிய இருவர், 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முதல் தளத்தில், தம்பதி வசிக்கின்றனர். இவர்களது, 10 வயது மகள், மொட்டை மாடியில் நின்று விளையாடுவது வழக்கம்.

கீழ் தளத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி, 48, என்பவர், பெற்றோர் இல்லாதபோது, சிறுமியுடன் விளையாடுவது போல் நடித்து, அவரிடம் அத்துமீறியுள்ளார். அதே தெருவில் வசிக்கும் கார்த்திக், 26, என்பவரும் இச்சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, தரமணி மகளிர் போலீசார், நேற்று முன்தினம், கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் ஆகியோரை, குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us