ADDED : நவ 24, 2024 09:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர்:பெசன்ட்நகர், ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் செல்வம், 44. இவர், 2019ம் ஆண்டு 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இவர், 2022 டிச., 30ம் தேதி முதல், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார்.
இவரை பற்றிய தகவல் தெரிந்தால், திருவான்மியூர் மகளிர் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் கூறியுள்ளனர்.