/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்து, வழக்குகளில் துப்பு துலக்குவதில் போலீசார் திணறல் விரைவு சாலைகளில் 'மூன்றாம் கண்' சீரமைக்க கோரிக்கை கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?
/
விபத்து, வழக்குகளில் துப்பு துலக்குவதில் போலீசார் திணறல் விரைவு சாலைகளில் 'மூன்றாம் கண்' சீரமைக்க கோரிக்கை கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?
விபத்து, வழக்குகளில் துப்பு துலக்குவதில் போலீசார் திணறல் விரைவு சாலைகளில் 'மூன்றாம் கண்' சீரமைக்க கோரிக்கை கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?
விபத்து, வழக்குகளில் துப்பு துலக்குவதில் போலீசார் திணறல் விரைவு சாலைகளில் 'மூன்றாம் கண்' சீரமைக்க கோரிக்கை கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?
ADDED : ஏப் 07, 2025 02:08 AM

திருவொற்றியூர்:திருவள்ளூர் - வடசென்னை இணைக்கும் வகையில், மாதவரம் விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி விரைவு சாலை மற்றும் எண்ணுார் விரைவு சாலைகள் உள்ளன. முக்கிய இணைப்பு சாலைகள் என்பதால், எந்நேரமும் அதிக போக்குவரத்து இருக்கும்.
மணலி, மாதவரம், பொன்னேரி, மீஞ்சூர், மணலிபுதுநகர், விச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சரக்கு பெட்டக முனையங்களில் இருந்து, சென்னை துறைமுகம் நோக்கி செல்லும் கன்டெய்னர் லாரிகளுக்கு, இந்த சாலைகளே பிரதானம்.
நான்கு வழி சாலையில், இரு அணுகு சாலைகளிலும், அனுமதிக்கப்படாத கன்டெய்னர் லாரிகள் பார்க்கிங் செய்யப்பட்டிருப்பதால், பிரதான சாலைகளில் மட்டுமே, போக்குவரத்து உள்ளது.
தவிர, அணுகு சாலைகளில், மாதக்கணக்கில் நிறுத்தியிருக்கும் கன்டெய்னர் லாரிகள், 'குடி'மகன்களின் கூடாரமாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இதனால், மாலைக்கு பின், அவ்வழியேசெல்லும் பெண்கள், கடும் அச்சத்தில் உள்ளனர்.
மணலிபுதுநகர் - பால்பூத் சந்திப்பு, ஆண்டார்குப்பம் சந்திப்பு, வைக்காடு சந்திப்பு, சாத்தாங்காடு சந்திப்பு, சத்தியமூர்த்தி நகர் சந்திப்பு, ஜோதி நகர் சந்திப்பு, முருகப்பா நகர் சந்திப்பு, லிப்ட் கேட் சந்திப்பு போன்ற இடங்களில், சிக்னல்கள் பொருத்த வேண்டும்.
'
சிசிடிவி' செயலிழப்பு
குறிப்பாக இந்த பகுதிகள், நான்கு முனை சந்திப்பாக இருப்பதால், ரவுண்டானா அமைப்பது மிக அவசியாக உள்ளது. மூன்று கி.மீ., துாரம் இருக்கும் எண்ணுார் விரைவு சாலையில், பாதசாரிகள் கடக்கும் வகையிலும், வாகனங்கள் திரும்ப ஏதுவாக அநேக இடங்களில் மீடியன் இடைவெளி உள்ளது.
இந்த இடங்களில், மீடியனின் கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதால், சாலையை கடக்கும் பாதசாரிகள், டூ - வீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
குறிப்பாக, சென்னை போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் இருந்தபோது, விரைவு சாலைகளில், 200 மீட்டர் இடைவெளியில் பொருத்தப்பட்ட போலீசாருக்கு 'மூன்றாம் கண்' போன்று உதவும் 'சிசிடிவி' கேமராக்கள், 'வர்தா' புயலுக்குபின் செயலிழந்து விட்டது. அவை சீரமைக்கப்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன், வாலிபர் ஒருவர் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவத்தில், 'விபத்து' என பதியப்பட்ட வழக்கு, சிசிடிவி கேமராவால் 'தற்கொலை' செய்தது உறுதியானது. இதையடுத்து, ஓட்டுனர் ஒருவர் காப்பற்றப்பட்டுள்ளார்.
கடந்த 1ம் தேதி, எர்ணாவூர் - ராமகிருஷ்ணா நகர் சந்திப்பில், வாலிபர் ஒருவர் லாரி ஏறி இறந்த நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டது. அந்த வழக்கில், 'சிசிடிவி' காட்சி பதிவுகள் ஏதுமில்லாததால், இறந்தவர் யார்; விபத்தை ஏற்படுத்திய லாரி எது என்பது குறித்து, இன்று வரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்தாண்டில் மட்டும், எண்ணுார் விரைவு சாலையில் 20 பேர் உட்பட, வடசென்னையின் விரைவு சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளில், 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, 'சிசிடிவி' கேமராக்களை சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண், இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.