/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ், ஆட்டோ ஓட்டுநர் சாலை நடுவே அடிதடி
/
போலீஸ், ஆட்டோ ஓட்டுநர் சாலை நடுவே அடிதடி
ADDED : ஜூலை 09, 2025 01:02 AM
மதுரவாயல், போக்குவரத்து போலீஸ்காரரும், ஆட்டோ ஓட்டுநரும், பொதுமக்கள் முன்னிலையில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மதுரவாயலில் நடந்த திருமண நிகழ்வில், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார்.
இதையொட்டி, மதுரவாயல் போக்குவரத்து போலீஸ்காரர் ஆறுமுகம்,41, என்பவர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் ஏரிக்கரை அருகே போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக ஆட்டோ ஓட்டி வந்த அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஆர்த்திஷ், 28, 'யு - டர்ன்' செய்யும்போது, பணியில் இருந்த போலீஸ்காரர் ஆறுமுகத்தின் கால் மீது ஏறி நிற்காமல் சென்றார்.
வலியில் துடித்த அவர், ஆட்டோவை விரட்டி பிடித்து கேள்வி எழுப்பியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. சாலை நடுவே போலீசாரும், ஆட்டோ ஓட்டுநரும் அடித்து கொண்டதை, அவ்வழியே சென்றோர் தடுத்தனர்.
காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை அங்கிருந்தோர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு அனுப்பினர். மதுரவாயல் காவல் நிலையத்தில், போலீஸ்காரரும்,ஆட்டோ ஓட்டுநரும் தனித்தனியே புகார் அளித்தனர்.