/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க போலீஸ் தடை
/
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க போலீஸ் தடை
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க போலீஸ் தடை
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பட்டாசு வெடிக்க போலீஸ் தடை
UPDATED : டிச 31, 2024 06:35 AM
ADDED : டிச 31, 2024 12:47 AM

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண் டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு, சென்னை காவல் துறை சார்பில், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், தி.நகர், அடையாறு, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட, 12 காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், 425 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
அத்துடன், பைக் ரேசில் ஈடுபடுபவர்களை தடுக்க, 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், புத்தாண்டு கொண் டாட்டத்தின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள், கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும், காவல் துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும், 2025ம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடுவதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி, 19,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மேம்பாலங்கள் மூடல்
புத்தாண்டை முன்னிட்டு, விபத்துகக்ளை தடுக்க முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள ௨௩ மேம்பாலங்களும் மூடப்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.