sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரூ.60,000 திருடிய ஊழியர் காரில் கடத்தல் இரவில் 7 பேரை விரட்டி பிடித்த போலீஸ்

/

 ரூ.60,000 திருடிய ஊழியர் காரில் கடத்தல் இரவில் 7 பேரை விரட்டி பிடித்த போலீஸ்

 ரூ.60,000 திருடிய ஊழியர் காரில் கடத்தல் இரவில் 7 பேரை விரட்டி பிடித்த போலீஸ்

 ரூ.60,000 திருடிய ஊழியர் காரில் கடத்தல் இரவில் 7 பேரை விரட்டி பிடித்த போலீஸ்


ADDED : ஜன 25, 2026 05:39 AM

Google News

ADDED : ஜன 25, 2026 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்டலுார்: வாகனம் பழுது பார்க்கும் கடையில், 60,000 ரூபாயை திருடி தப்பிய ஊழியரை, சாதுர்யமாக அழைத்து, காரில் கடத்தி சென்ற ஏழு பேரை, 40 கி.மீ., விரட்டிச் சென்று, போலீசார் கைது செய்தனர். சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தாம்பரம் அடுத்த சேலையூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் சரவணன், 24. இவர், 2025 அக்டோபரில், தனக்கு பெற்றோர் இல்லை எனக்கூறி, செங்குன்றம், அம்பேத்கர் நகரில், 'டூ - வீலர்' பழுது பார்க்கும் கடை நடத்தி வரும் அஸ்லாம், 38, என்பவரிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

கடந்த 16ம் தேதி அஸ்லாம் வெளியே சென்றிருந்த நிலையில், கடையில் இருந்து, 60,000 ரூபாயை திருடிய சரவணன்தலைமறைவானார்.

பணம் திருடு போனதால் அதிர்ச்சியடைந்த அஸ்லாம், சரவணனை பிடிக்க ஒரு பெண்ணின் உதவியை நாடி உள்ளார். அந்த பெண் நேற்று முன்தினம், சமூக வலைதளம் வாயிலாக, சரவணனை தொடர்பு கொண்டு காதலிப்பதாகவும், இரவு 11:00 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வந்தால், பேருந்து வாயிலாக வெளியூருக்கு ஜாலியாக சென்று திரும்பலாம் என, கூறி உள்ளார்.

இதை நம்பிய சரவணன், கிளாம்பாக்கம் வந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்டபோது, வண்டலுார் உயிரியல் பூங்கா சந்திப்பில், பவானி திருமண மண்டபம் அருகே நிற்பதாக கூறி உள்ளார்.

மண்டபம் அருகே சரவணன் வந்தபோது, அங்கே மாருதி பொலிரோ காரில், செங்குன்றத்தை சேர்ந்த தன் நண்பர்கள் யோகேஷ், 29, விஜயகுமார், 31, ரஞ்சித் குமார், 23, மஸ்தான், 19, நந்தகுமார், 22, மோகன், 19, ஆகிய ஆறு பேருடன் தயார் நிலையிலிருந்த அஸ்லாம், சரவணனை அடித்து உதைத்து, காரில் கடத்தி சென்றுள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, வண்டலுாரை அடுத்த ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வானமாமலை, எஸ்.ஐ., வெற்றி செல்வன் மற்றும் நான்கு போலீசார், மாருதி பொலிரோ காரை, மற்றொரு காரில் 40 கி.மீ., விரட்டி சென்றனர்.

அதிகாலை 2:00 மணிய ளவில், புழல் - செங்குன்றம் சாலையில், நாகாத்தம்மன் கோவில் அருகே, காரை நிறுத்தி சரவணனை மீட்டு, அஸ்லாம் மற்றும் அவரது நண்பர்கள் ஆறு பேரையும் கைது செய் தனர்.

பின், ஓட்டேரி காவல் நிலையம் அழைத்து சென்று வழக்கு பதிந்து, கைதான ஏழுபேரையும் பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us