/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடற்கரை ஷெட்டில் தங்கும் மீனவர்களை விரட்டும் போலீசார்: மீனவர்கள் குமுறல்
/
கடற்கரை ஷெட்டில் தங்கும் மீனவர்களை விரட்டும் போலீசார்: மீனவர்கள் குமுறல்
கடற்கரை ஷெட்டில் தங்கும் மீனவர்களை விரட்டும் போலீசார்: மீனவர்கள் குமுறல்
கடற்கரை ஷெட்டில் தங்கும் மீனவர்களை விரட்டும் போலீசார்: மீனவர்கள் குமுறல்
ADDED : ஜூலை 14, 2025 01:54 AM
சென்னை:'சென்னையில், இரவில் கடற்கரை ஷெட்டில் ஓய்வெடுக்கும் மீனவர்களை, முறைகேடு செயலில் ஈடுபடுவதாக கூறி போலீசார் விரட்டுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது' என, மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சென்னை, நொச்சிக்குப்பம் பகுதியில், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், உடைமைகள் மற்றும் மீன்பிடிக்க தேவையான மீன்வலை, துாண்டில் போன்றவற்றை வைக்கவும், ஓய்வு எடுக்கவும் கடற்கரையில் ஷெட்களை பயன்படுத்துகின்றனர்.
அப்பகுதிக்கு, இரவு நேரங்களில் ரோந்து வரும் போலீசார், மீனவர்களை வீட்டிற்கு செல்லும்படி கூறுவதாகவும், செல்லவில்லை எனில் அவர்களை மிரட்டும் ரீதியில் பேசுவதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, அப்பகுதி மீனவர்கள் சிலர் கூறியதாவது:
கடலில், இரண்டு நாள், மூன்று நாள் தங்கி மீன்பிடிக்கிறோம். கரைக்கு திரும்பியதும், சிறிது நேரம் ஓய்வுக்கு பின் அல்லது ஒரு நாள் கழித்து மீண்டும் கடலுக்கு செல்கிறோம். அப்போது, மீன்வலை, துாண்டில் உள்ளிட்டவற்றை படகு நிறுத்தத்திற்கு அருகில் உள்ள சிறிய ஷெட்டில் வைப்போம். சிறிது நேரம் அங்கு ஓய்வெடுப்போம்.
இரவு 8:15 மணிக்கு ரோந்து வரும் போலீசார், நாங்கள் முறைகேடு செயல்களில் ஈடுபடுவது போல், எங்களை அங்கிருந்து விரட்டுகின்றனர்.
கடலுக்கு சென்று மீன் பிடித்து அசதியாக வந்து சிறிது ஓய்வெடுக்கும் எங்களை, போலீசார் இப்படி நடத்துவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.