தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தீயில் கருகிய குடிசை போலீசார் உதவி

 தீயில் கருகிய குடிசை போலீசார் உதவி

 தீயில் கருகிய குடிசை போலீசார் உதவி


ADDED : மார் 03, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படப்பை:தீப்பற்றி குடிசை தீக்கிரையான நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, மணிமங்கலம் போலீசார் உதவிக்கரம் நீட்டினர்.

படப்பை அருகே செரப்பணஞ்சேரி அடுத்த வெள்ளேரிதாங்கலை சேர்ந்தவர் யாஷ்மின், 41. இவர், செரப்பணஞ்சேரி அருகே சாலையோரம் தள்ளுவண்டி கடை நடத்தி வருகிறார்.

யாஷ்மின், தன் இரு மகள்களுடன், நேற்று முன்தினம் தன் குடிசை வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அதிகாலை 5:00 மணிக்கு திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.

புகை நெடியை உணர்ந்த யாஷ்மின், தன் மகள்களுடன் உடனே வீட்டை விட்டு வெளியேறினார். இதில், குடிசை வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

இந்நிலையில், மணிமங்கலம், படப்பை போலீசார் சார்பில், பாதிக்கப்பட்ட யாஷ்மின் குடும்பத்திற்கு, 2 மூட்டை அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களுடன், தள்ளுவண்டி கடை நடத்த 20,000 வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us