UPDATED : ஆக 26, 2026 11:02 PM
ADDED : ஆக 26, 2026 10:53 PM
சென்னை:கடந்த சட்டசபை தேர்தலில், துறைமுகம் தொகுதியில், தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு போட்டியிட்டார். த.வெ.க., சார்பில் வேட்பாளர் சினோரா அசோக் போட்டியிட்டார். ஓட்டுப்பதிவு நடந்த, ஏப்., 23ம் தேதி, சென்னை, மண்ணடி, அங்கப்ப நாயக்கன் தெருவில் இருந்த ஓட்டுச் சாவடிக்கு சேகர்பாபு, தன் ஆதரவாளர்களுடன் சென்றார்.
அப்போது, த.வெ.க.,வினருக்கும் - தி.மு.க.,வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சேகர்பாபுவும், சினோரா அசோக்கும் மோதிக் கொண்டனர். அப்போது, சினோரா அசோக்கை, சேகர்பாபு தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து குறித்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில், சினோரா அசோக் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், சேகர்பாபு மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல் உட்பட, ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, வடக்கு கடற்கரை போலீசார், சேகர்பாபுவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்தனர். காலை 11:00 மணிக்கு தொடங்கிய விசாரணை, மதியம் 2:15 மணிக்கு நிறைவடைந்தது.
***
