/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறார் இல்லங்களில் வன்கொடுமை போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
/
சிறார் இல்லங்களில் வன்கொடுமை போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
சிறார் இல்லங்களில் வன்கொடுமை போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
சிறார் இல்லங்களில் வன்கொடுமை போலீஸ் கண்காணிப்பு தீவிரம்
ADDED : ஜூலை 22, 2025 12:49 AM
தாம்பரம், தாம்பரம் போலீஸ் கமிஷனரக எல்லையில், அரசு மற்றும் தனியார் சிறார் பராமரிப்பு இல்லங்களில், பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்கும் வகையில், போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவத்தை முற்றிலும் தவிர்க்க, தாம்பரம் போலீஸ் கமிஷனரகம், தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து பாதுகாப்பு இல்லங்களிலும், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த, தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அனைத்து மகளிர் காவல் நிலையங்களை சேர்ந்த மகளிர் சப் - இன்ஸ்பெக்டர்கள், தங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட இடங்களில் இயங்கி வரும் சிறார் மற்றும் சிறுமியர் பராமரிப்பு, அரசு மற்றும் தனியார் சேவை இல்லங்களுக்கு, வாரத்திற்கு இரண்டு முறை சென்றுவர வேண்டும்.
இந்த ஆய்வின் போது, மாணவியருடன் நேரடியாக உரையாடி, அவர்களின் குறைகளை கேட்டு, ஏதேனும் புகார் இருந்தால் உடனடியாகத் தீர்க்க வேண்டும்.
ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் சேவை இல்லத்திலும், நிர்வாக பொறுப்பில் உள்ள ஊழியர்கள், காவல் அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் மொபைல் போன் எண்களை, சேவை வளாகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும்.
இது, பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் சிறார் மற்றும் ஊழியர்கள், காவல் உதவி பெறவும், தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகாரளிக்க, தாமதமின்றி அணுகுவதையும் உறுதி செய்யும்.
ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு புகார் பெட்டி அமைத்து, வாரத்திற்கு ஒருமுறை இன்ஸ்பெக்டர்கள் புகார் பெட்டியை திறந்து, ஏதாவது புகார் இருப்பின், உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
ஆய்வின் போது, பராமரிப்பு இல்லங்கள் முழுமையாக ஒத்துழைக்குமாறும், பாதுகாப்பு நெறிமுறைகளை சமரசமின்றி அமல்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.