ADDED : ஏப் 11, 2025 11:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர்,பெரம்பூர், ரமணா நகரைச் சேர்ந்தவர் மனோஜ், 34; ஆட்டோ ஓட்டுனர். இவர், வழக்கம்போல நேற்று முன்தினம் காலை ஆட்டோவை சவாரிக்கு எடுத்து சென்றபோது, ஆட்டோவில் இருந்த பேட்டரி மாயமானது தெரிய வந்தது.
அதேபோல், பெரம்பூர், கார்ப்பென்டர் சாலை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், 30 என்பவர் உட்பட, மேலும் இருவரின் ஆட்டோவில் இருந்த பேட்டரியும் மாயமாகி இருந்தது. இது குறித்து விசாரிக்கும் செம்பியம் போலீசார், பேட்டரி திருடனை தேடி வருகின்றனர்.

