/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
17 வயதில் திருமணம் செய்து கொடுமை ஆறு பேரிடம் போலீஸ் விசாரணை
/
17 வயதில் திருமணம் செய்து கொடுமை ஆறு பேரிடம் போலீஸ் விசாரணை
17 வயதில் திருமணம் செய்து கொடுமை ஆறு பேரிடம் போலீஸ் விசாரணை
17 வயதில் திருமணம் செய்து கொடுமை ஆறு பேரிடம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 11, 2025 12:56 AM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை சேர்ந்தவர் 19 வயது பெண். இவர், 17 வயது சிறுமியாக இருந்த போது, 2023, ஏப்., 23ம் தேதி வடபழனி கோவில் மண்டபத்தில் வலுக்கட்டாயமாக விஜய், 25 என்பவருக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இருவரும் ஒன்பது மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், விஜய் தினமும் மது அருந்தி விட்டு மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார். விஜயின் பெற்றோர் மற்றும் சகோதரியும் சேர்ந்து, சிறுமியை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், சென்னை, சமூக நலத்துறை மாவட்ட ஆட்சியர் அலுவலக, நகர நல அலுவலரான அமலோற்பவத்திடம் புகார் தரப்பட்டது. இதையடுத்து, குழந்தை திருமணச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அமலோற்பவம் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், புளியந்தோப்பை சேர்ந்த விஜய், மாமனார், மாமியார், பெண்ணின் நாத்தனார் மற்றும் பெண்ணின் தாய் உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகின்றனர்.