/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவனை கடித்த நாய் போலீசில் புகார்
/
சிறுவனை கடித்த நாய் போலீசில் புகார்
ADDED : மே 04, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
திருவல்லிக்கேணி, நடுக்குப்பம், எட்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜாரமன், 35. அவரது 10 வயது மகன், கடந்த 30ம் தேதி, வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றான்.
அப்போது ராஜாராமனின் பக்கத்து வீட்டில் விஜயசாந்தி என்பவர் வளர்த்து வந்த நாய், சிறுவனின் தொடையில் கடித்தது. காயமடைந்த சிறுவனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் வீடு திரும்பிய நிலையில், நாயின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிறுவனின் பெற்றோர், மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

