/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாகன ஓட்டிக்கு நெஞ்சு வலி போலீஸ் மீட்பு
/
வாகன ஓட்டிக்கு நெஞ்சு வலி போலீஸ் மீட்பு
ADDED : நவ 07, 2024 12:33 AM

துரைப்பாக்கம்: கூடலுார், பண்ருட்டியைச் சேர்ந்தவர் முருகன், 32. ஓ.எம்.ஆரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
நேற்று, துரைப்பாக்கத்தில் இருந்து, தரமணி நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
துரைப்பாக்கம் சிக்னல் அருகே, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, வாகனத்துடன் விழுந்தார். அங்கு, பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், அவரை ஆசுவாசப்படுத்தி ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், போலீசார் அவரை துாக்கி சென்று, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் வந்தது.
மேல் சிகிச்சைக்கு, அதே ஆம்புலன்சில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
போலீசார், முருகன் பணிபுரிந்த நிறுவனம் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
உரிய நேரத்தில் அவரை மருத்துவமனையில் சேர்த்ததால், விரைந்து சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற முடிந்தது என, மருத்துவர் கூறினார்.