/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலை ஓர பள்ளத்தில் விழுந்த டிராக்டரை தேடும் போலீஸ்
/
சாலை ஓர பள்ளத்தில் விழுந்த டிராக்டரை தேடும் போலீஸ்
சாலை ஓர பள்ளத்தில் விழுந்த டிராக்டரை தேடும் போலீஸ்
சாலை ஓர பள்ளத்தில் விழுந்த டிராக்டரை தேடும் போலீஸ்
ADDED : அக் 24, 2024 12:36 AM
செம்மஞ்சேரி, அசெம்மஞ்சேரி, நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, 80 அடி அகலம் உடையது. பக்கவாட்டில், ஆக்கிரமிப்பில் இருந்த, 62 ஏக்கர் இடம், சில மாதங்களுக்கு முன் மீட்கப்பட்டு, திட்ட பணிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. இந்த இடம், சாலை மட்டத்தைவிட, 5 அடி வரை தாழ்வாக உள்ளது.
நேற்று அதிகாலை, குடிநீர் ஏற்றிச் சென்ற டிராக்டர், சாலையோர பள்ளத்தில் விழுந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில், ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ரோந்து போலீசார் விசாரணையில், டிராக்டர், அதோடு குடிநீர் தொட்டி வைத்து ஓட்ட, முறையாக அனுமதி பெறாததும், ஆயுள் காப்பீடு இல்லை என்பதும் தெரிந்தது. அரை மணி நேரத்தில், டிராக்டர் எடுத்து செல்லப்பட்டது.
பள்ளிக்கரணை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றபோது, விபத்து நடந்த அடையாளமே தெரியவில்லை. டிராக்டர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

