/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொய் வழக்கில் மூவரை சிக்க வைத்த போலீசார் 'சஸ்பெண்ட்'
/
பொய் வழக்கில் மூவரை சிக்க வைத்த போலீசார் 'சஸ்பெண்ட்'
பொய் வழக்கில் மூவரை சிக்க வைத்த போலீசார் 'சஸ்பெண்ட்'
பொய் வழக்கில் மூவரை சிக்க வைத்த போலீசார் 'சஸ்பெண்ட்'
ADDED : ஜன 22, 2026 05:12 AM
சென்னை: பொய் வழக்கில் மூவரை கைது செய்த போலீசார், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப் பட்ட நிலையில், திடீரென நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
மயிலாப்பூர், பிடாரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வனிதா, 36. இவரது கணவர் அப்துல்லா, 36 மற்றும் அவரது நண்பர் மணிகண்டன், 40 ஆகியோர், கள்ளச் சாராயம் விற்றதாக தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தனிப்படை குழுவில் இருந்த ஜாம்பஜார் காவல் நிலைய போலீஸ்காரர் வினோத்குமார், ராயப்பேட்டை காவல் நிலைய போலீஸ்காரர் பிரகலாதன், பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீஸ்காரர் செல்வகுமார் ஆகிய மூவரும், மாமூல் கேட்டு தராததால், பொய் வழக்கில் வனிதா உட்பட மூவரை சிக்க வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, கிழக்கு மண்டல இணை கமிஷனர் பண்டிட் கங்காதர் மூன்று போலீசாரையும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், நேற்று திடீர் திருப்பமாக 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டனர்.

