/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல் முறையாக 'காவலர் தினம்' போலீசார் உறுதிமொழி ஏற்பு
/
முதல் முறையாக 'காவலர் தினம்' போலீசார் உறுதிமொழி ஏற்பு
முதல் முறையாக 'காவலர் தினம்' போலீசார் உறுதிமொழி ஏற்பு
முதல் முறையாக 'காவலர் தினம்' போலீசார் உறுதிமொழி ஏற்பு
ADDED : செப் 06, 2025 11:19 PM
சென்னை,சென்னையில் உள்ள காவல் நிலையங்களில், நேற்று, முதல்முறையாக காவலர் தினம் சிறப்பிக்கப்பட்டது.
கடந்த 1859ம் ஆண்டு, செப்.,6ம் தேதி, மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை சிறப்பிக்கும் வகையில், காவலர் தினம் கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையொட்ட, நேற்று, முதல் முறையாக சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலையங்களும், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.
சென்னை, வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில், கமிஷனர் அருண் தலைமையில், 'காவலர் தினம்' நேற்று கொண்டாடப்பட்டது.
முன்னதாக, காவல் துறையின் மேல்நிலை பள்ளியில் பயிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு கல்வியில் வழிகாட்டும் பயிற்சி நடந்தது. இதில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு, கமிஷனர் அருண் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகா, தமிழ்நாடு பாதுகாப்பு பிரிவு துணை தலைவர் திருநாவுக்கரசு, உட்பட பலர் பங்கேற்றனர்.
* குன்றத்துார் காவல் நிலையத்தில் காவலர் தின கொண்டாட்டத்தின்போது, கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜிவ் ஸ்ரீபெரும்புதுாரில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, பயங்கரவாதிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த குன்றத்துார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எத்திராஜ் பலியானார். அவரை நினைவு கூரும் வகையில், குன்றத்துார் காவல் நிலைய வளாகத்தில் நினைவு துாண் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்முன், துப்பாக்கி ஏந்திய போலீசார் மூன்று சுற்றுகளாக 30 முறை வானத்தை நோக்கி சுட்டு வீரவணக்கம் செலுத்தினர்.
* ஓ.எம்.ஆரில் நடந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கரணை காவல் துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில், காவலர் தினம் சிறப்பிக்கப்பட்டது.
* ஆனவீ போலீஸ் கமிஷனரகம் சார்பில், திருமுல்லைவாயலில் உள்ள போலீஸ் கன்வென்சன் சென்டரில் காவலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், 500க்கும் மேற்பட்ட போலீசார் காவலர் தின உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, காவல் பணியில் சிறப்பாக செயல்பட்ட 2 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 53 போலீசாருக்கு கமிஷனர் சங்கர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
* தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில், போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் தலைமையில், நேற்று, காவலர் தினம் கொண்டாடப்பட்டது. தாம்பரம் ஆயுதப்படை அதிகாரிகள் அணிவகுப்பு மரியாதையை, கமிஷனர் ஏற்றுக் கொண்டார்.