/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாட்ஸாப் கணக்கு ஹேக்கிங்' மோசடி பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
/
வாட்ஸாப் கணக்கு ஹேக்கிங்' மோசடி பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
வாட்ஸாப் கணக்கு ஹேக்கிங்' மோசடி பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
வாட்ஸாப் கணக்கு ஹேக்கிங்' மோசடி பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : பிப் 02, 2025 08:28 PM
சென்னை:சென்னையில், சில தினங்களாக வாட்ஸாப் கணக்கு ஹேக்கிங் மோசடி அதிகரித்து வருவதாக, போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
* வாட்ஸாப் நிறுவனம், ஆக்டிவேசன் கோடு எண்ணை, மொபைல் எண் உரிமையாளர் அல்லாத நபர்களின் எண்ணிற்கு அனுப்பாது.
* உங்களுடைய மொபைல் போன் எண்ணிற்கு வரும், 6 இலக்கு ஆக்டிவேசன் கோடுகளை, எந்த நபருக்கும் கொடுக்காதீர்.
* சந்தேக நபர்களிடமிருந்து அழைப்புகள் வந்தால், அந்த எண்களை உடனடியாக நிராகரிப்பதுடன் முடக்கம் செய்துவிடவும்.
* அடையாளம் தெரியாத நபர்களிடம் பேசும் போது, கவனமாக இருக்க வேண்டும்.
* முன்பின் தெரியாத நபர்களிடம், நம்முடைய தனிப்பட்ட வங்கி சார்ந்த மற்றும் பண இருப்பு விபரங்கள், கடவுச்சொற்கள், ஆக்டிவேசன் எண்களை தெரிவித்து, அடையாளம் தெரியாத வங்கி கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி, ஏமாற்றம் அடைய வேண்டாம்.
* சைபர் குற்றங்கள் வாயிலாக பணம் இழப்பு ஏற்பட்டால், சைபர் கிரமை் உதவி எண்: 1930 மற்றும் வலைதள முகவரியில் புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
* இதுபோன்ற நிகழ்வுகளில், உடனடியாக ஏதும் உதவி தேவையிருந்தால், அருகிலிருக்கும் காவல் நிலையம் அல்லது அவசர உதவி எண்: 100ஐ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

