தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கல்லுாரி மாணவியிடம் பணம் பறித்து அத்துமீறிய போலீஸ்காரர் சிக்கினார்

கல்லுாரி மாணவியிடம் பணம் பறித்து அத்துமீறிய போலீஸ்காரர் சிக்கினார்

கல்லுாரி மாணவியிடம் பணம் பறித்து அத்துமீறிய போலீஸ்காரர் சிக்கினார்


UPDATED : மே 01, 2026 09:43 PM

ADDED : மே 01, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 01, 2026 09:43 PM ADDED : மே 01, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெசன்ட் நகர்: கல்லுாரி மாணவியிடம் பணம் பறித்ததுடன், அநாகரிகமாக நடந்துக் கொண்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, அடையாறு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி, சக மாணவர் ஒருவருடன் கடந்த 29ம் தேதி பெசன்ட் நகருக்கு காரில் சென்றுள்ளார். இரவில் பெசன்ட் நகர் குறுக்கு தெருவில் காரின் பின் சீட்டில் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தனர்

அப்போது, ​அங்கு வந்த ஒருவர், 'டார்ச்' அடித்து உள்ளே இருப்போரை பார்த்து விட்டு, காரின் முன் பக்க கதவை திறந்து உள்ளே அமர்ந்தார். அடையாள அட்டையுடன் தன்னை, சாஸ்திரி நகர் போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி உள்ளார்.

மேலும், 'இருளில் காரில் அமர்ந்து என்ன செய்கிறீர்கள் என, மிரட்டல் தொனியில் விசாரித்தார். இருவரும் கல்லுாரியில் ஒன்றாக படிக்கும் நண்பர்கள் என சொல்லியும் அவர் ஏற்க மறுத்தார். பொதுவெளியில் அத்துமீறி நடந்ததாக வழக்கு பதிந்து கைது செய்வதாக மிரட்டினார்.

பின், இருவர் மீதும் வழக்கு பதியாமல் விடுவிக்க பணம் கேட்டுள்ளார். அந்த மாணவர் கணக்கில், 5,000 ரூபாய் இருந்துள்ளது. மாணவியின் கணக்கில் இருந்த 3,000 ரூபாயை, மாணவரின் கணக்கில், மொபைல் போன் பணப்பரிமாற்ற செயலியான 'ஜிபே' வாயிலாக மாற்றும்படி கூறியுள்ளார்.

பின், அவரே காரை ஓட்டிச் சென்று பெசன்ட் நகர் 3வது பிரதான சாலையில், வங்கி ஏ.டி.எம்., முன் நிறுத்தினார். மாணவரை வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து வரும்படி கூறினார்.

மாணவர் சென்ற நேரம் மாணவியிடம், அந்த போலீஸ்காரர் அத்துமீறியுள்ளார். பிறகு மாணவரிடம் இருந்து பணத்தை பெற்று, காரை எடுத்த இடத்திலேயே விட்டு தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை, நேற்று முன்தினம் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். அவர் பெற்றோரிடம் கூறவே, மாணவியின் பெற்றோர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசார், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், மாணவியிடம் தவறாக நடந்தது கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பைச் சேர்ந்த ஜோசப், 30, என்பது தெரியவந்தது. தற்போது, அயல் பணியாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்து, இதுபோல எத்தனை பேரிடம் கைவரிசை காட்டியுள்ளார். எத்தனை பெண்களிடம் தவறாக நடந்துள்ளார் என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us