/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செயின் பறிப்பு திருடனை துரத்தி பிடித்த போலீஸ்காரர்
/
செயின் பறிப்பு திருடனை துரத்தி பிடித்த போலீஸ்காரர்
செயின் பறிப்பு திருடனை துரத்தி பிடித்த போலீஸ்காரர்
செயின் பறிப்பு திருடனை துரத்தி பிடித்த போலீஸ்காரர்
ADDED : பிப் 05, 2026 06:02 AM

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் பேருந்தில் பயணித்த பெண்ணின் செயினை பறித்து தப்பியோட முயன்ற நபரை, பொதுமக்கள் உதவியுடன் போலீஸ்காரர் துரத்தி பிடித்தார்.
சிந்தாதிரிபேட்டை, என்.என்., நகரைச் சேர்ந்தவர் ரேவதி, 48. இவர் , நேற்று முன்தினம் இரவு, திருவல்லிக்கேணியில் இருந்து, தடம் எண்: '29ஏ' மாநகர பேருந்தில், ஓட்டேரி செல்வதற்காக, படிக்கட்டு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணித்தார்.
பேருந்து, கீழ்ப்பாக்கம் - தாசபிரகாஷ் பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அப்போது, அங்கு நின்றிருந்த ஒருவர், திடீரென பேருந்தை நோக்கி ஓடி வந்து, ரேவதி கழுத்தில் அணிந்திருந்த, 5 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றார்.
சுதாரித்த ரேவதி, சத்தம் போட்டபடி செயினை இறுக்கமாக பிடித்தார். இதனால், தாலி செயினின் ஒரு பகுதி அறுந்தது. மீதமுள்ள பகுதி ரேவதியிடமே தப்பியது. அப்போது அதேபகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், பொதுமக்கள் உதவியுடன், மர்ம நபரை விரட்டி பிடித்து, கீழ்ப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வியாசர்பாடியை சேர்ந்த சரண், 26, என்பதும், அவர் மீது ஏழு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவரிடமிருந்து, தாலி செயினின்றி ஒரு பகுதியான, 2 சவரனை மீட்ட போலீசார், சரணை சிறையில் அடைத்தனர்.

