/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடன் பிரச்னையில் போலீஸ்காரர் தற்கொலை
/
கடன் பிரச்னையில் போலீஸ்காரர் தற்கொலை
ADDED : பிப் 19, 2024 01:33 AM
எழும்பூர்,:கீழ்ப்பாக்கம் சட்டம் - ஒழுங்கு பிரிவில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றியவர் சுரேஷ், 34. இவர், புதுப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார்.
நேற்று முன்தினம், சுரேஷின் மனைவி மற்றும் பிள்ளைகள் ஊருக்குச் சென்ற நிலையில், சுரேஷ் அவரது அண்ணனுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. பின், அவரவர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று காலை வெகு நேரமாகியும் சுரேஷ் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.
அதிகாலை 3:00 மணி சுழற்சி பணிக்கு வரவேண்டிய சுரேஷ் வராததால், கீழ்ப்பாக்கம் போலீசார் தொடர்ந்து அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டனர்.
அவரிடம் இருந்து பதில் இல்லாததால், அருகில் வசிக்கும் சக போலீசாரை தொடர்பு கொண்டு, சுரேஷை பார்த்து தகவல் அளிக்கும்படி கூறியுள்ளனர்.
அவர்கள் அங்கு சென்று பார்த்த போது, சுரேஷ் தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. சுரேஷ் உடலை கைப்பற்றி எழும்பூர் போலீசார் விசாரித்ததில், கடன் மற்றும் குடும்ப பிரச்னையில் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது.

