ADDED : மார் 16, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிமலை, கடலுாரை சேர்ந்தவர் திருவேங்கடம், 36. ஆலந்துார், ராஜா தெரு காவலர் குடியிருப்பில் தங்கி, ராஜிவ்காந்தி மருத்துவமனையில் போலீசாக பணி புரிந்தார்.
தினமும் மது குடிப்பதால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சிகிச்சையும் எடுத்துள்ளார். சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார்.
நேற்று, வீட்டில் இருந்தபோது, திடீரென துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.