தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின்கம்பி அறுந்து விழுந்து உடல் கருகி காவலாளி பலி

மின்கம்பி அறுந்து விழுந்து உடல் கருகி காவலாளி பலி

மின்கம்பி அறுந்து விழுந்து உடல் கருகி காவலாளி பலி


UPDATED : அக் 17, 2026 08:27 PM

ADDED : அக் 17, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 08:27 PM ADDED : அக் 17, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநின்றவூர்: வேலைக்குச் செல்ல திருநின்றவூர் மேம்பாலத்தின் கீழ், பேருந்துக்காகக் காத்திருந்த 60 வயது காவலாளி மீது உயரழுத்த மின்வடம் அறுந்து விழுந்ததில், உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணையன், 60; பாக்கம் அடுத்த புலியூரில் தனியார் நிறுவன காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பிச்சையம்மாள், 55. மகன் விஜய், 40; தனியார் நிறுவன ஊழியர்.

வேலைக்கு செல்வதற்காக, நசரத்பேட்டையில் இருந்து திருநின்றவூருக்கு நேற்று காலை வந்தார்.

புலியூர் பேருந்திற்காக, சி.டி.எச்., சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ், குடையுடன் காத்திருந்தார்.

அப்போது, மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி அறுந்து, அவர் மீது விழுந்தது. இதில், மின்சாரம் பாய்ந்து உடலில் தீப்பற்றியதில், சம்பவ இடத்திலேயே கருகி, பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், மின் விநியோகத்தைத் துண்டித்தனர். திருநின்றவூர் போலீசார், கண்ணையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘திருநின்றவூர் பகுதியில் சில நாட்களாக பெய்து வரும் மழையால், மேம்பாலத்தின் கீழ் செல்லும் 11 கி.வோ., மின்வடத்தில் பொருத்தப்பட்டிருந்த, ‘இன்சுலேட்டர் டிஸ்க்’ திடீரென வெடித்துள்ளது. இதனால், மின்வடம் அறுந்து விபத்து ஏற்பட்டுள்ளது’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us