/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலுக்கு அடியில் சிக்கிய முதியவரை மீட்ட போலீஸ்காரர்
/
ரயிலுக்கு அடியில் சிக்கிய முதியவரை மீட்ட போலீஸ்காரர்
ரயிலுக்கு அடியில் சிக்கிய முதியவரை மீட்ட போலீஸ்காரர்
ரயிலுக்கு அடியில் சிக்கிய முதியவரை மீட்ட போலீஸ்காரர்
ADDED : செப் 18, 2025 06:10 PM
சென்னை: ஓடும் ரயிலில் ஏற முயன்று, ரயிலுக்கும் ரயில் பாதைக்கும் இடையில் சிக்கிய முதியவரை, ரயில்வே போலீஸ்காரர் பத்திரமாக மீட்டார்.
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில், நேற்று காலை 11:30 மணியளவில் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
அப்போது அரக்கோணத்தைச் சேர்ந்த தயாளன், 71, என்ற முதியவர் ஓடும் ரயிலில் அவசரமாக ஏற முயன்றார். அப்போது நிலை தடுமாறி, ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டார்.
அங்கிருந்த ரயில்வே போலீஸ்காரர் அஜய்சிங் துணிச்சலாக செயல்பட்டு, தன் உயிரை பணயம் வைத்து முதியவர் தயாளனை பத்திரமாக மீட்டார். அஜய்சிங்கின் செயல்பாட்டை அனைவரும் பாராட்டினர்.