/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடைபாதையில் அரசியல் 'பேனர்' பாதசாரிகள் கடும் அதிருப்தி
/
நடைபாதையில் அரசியல் 'பேனர்' பாதசாரிகள் கடும் அதிருப்தி
நடைபாதையில் அரசியல் 'பேனர்' பாதசாரிகள் கடும் அதிருப்தி
நடைபாதையில் அரசியல் 'பேனர்' பாதசாரிகள் கடும் அதிருப்தி
ADDED : பிப் 01, 2024 12:28 AM

சென்னை, நிகழ்ச்சி முடிந்து பல நாட்களாகியும், நடைபாதையில் கட்டப்பட்ட அரசியல் 'பேனர்'களை அப்புறப்படுத்தாமல் இருப்பதால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.
சென்னையில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மக்களுக்கு இடையூறாக அரசியல் பேனர், விளம்பர பலகைகள் வைக்கப்படுவதால், கடும் அவதியடைகின்றனர்.
கடந்த வாரம் திருச்சியில் நடந்த வி.சி.க., கட்சியின் பொதுக்கூட்டத்திற்காக, சென்னை முழுதும் ஏராளமான இடங்களில் ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டன.
நிகழ்ச்சி முடிந்து பல நாட்களாகியும், தற்போது வரை சாலையோரங்களில் உள்ள பேனர்கள் அகற்றப்படவில்லை. இதனால், பல இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
குறிப்பாக கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் பகுதியில் உள்ள புலியூர் பிரதான சாலையில், வி.சி.க., கட்சியினர், 'பொங்கல்' பண்டிகைக்காக, நடைபாதையில் வாழ்த்து பேனர் வைத்தனர்.
பண்டிகை முடிந்து, 15 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை அந்த பேனர்களை அகற்றாமல் இருப்பதால், மக்கள் கடும் அவதியடைகின்றனர்.
இதேபோல் நுங்கம்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை, அமைந்தகரை, அண்ணா நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், பொதுக்கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர்கள், இந்நாள் வரை அகற்றப்படாமல் இருப்பது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, அரசியல் விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.