/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிரின்ஸ்' குழும பள்ளிகளில் பொங்கல் விழா விமரிசை
/
'பிரின்ஸ்' குழும பள்ளிகளில் பொங்கல் விழா விமரிசை
ADDED : ஜன 14, 2025 12:45 AM

சென்னை, மடிப்பாக்கம், நங்கநல்லுார் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்ரீவாரி மேல்நிலைப் பள்ளியின் சார்பில், பொங்கல் விழா பள்ளி வளாகத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவில், பிரின்ஸ் கல்வி குழுமங்களின் தலைவர் வாசுதேவன் பேசுகையில், ''இந்த பள்ளியில் கல்வி மட்டுமல்லாமல் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாசாரம் கற்பிக்கப்படுகிறது.
''அதன் வெளிப்பாடே பொங்கல் விழா கொண்டாட்டம். இதில் பங்கேற்ற மாணவர்கள், நமக்கு உணவளித்த உழவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், கல்யாணமாலை மோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பொங்கல் விழாவை துவக்கி வைத்தனர்.
பின், பாரதி பாஸ்கர் பேசுகையில், ''நம் நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயம் குறித்து மாணவர்கள் நன்கு உணர்ந்து, உங்கள் கல்வி அறிவைக்கொண்டு, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு அவர்களுக்கு உதவ வேண்டும்,'' என்றார்.
விழாவில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, மண்டல குழு தலைவர் சந்திரன், பிரின்ஸ் கல்விக் குழும துணைத் தலைவர்கள் விஷ்ணுகார்த்திக், பிரசன்னா வெங்கடேசன், செயலர் ரஞ்சனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொங்கல் விழாவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.