/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொங்கல் சிறப்பு சந்தை காய்கறி வரத்து அதிகரிப்பு
/
பொங்கல் சிறப்பு சந்தை காய்கறி வரத்து அதிகரிப்பு
ADDED : ஜன 14, 2026 05:50 AM

கோயம்பேடு: கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.
கோ யம்பேடு சந்தையில், பொங்கல் சிறப்பு சந்தை வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கடந்த மூன்று நாட்களில் மட்டும் 400 லாரி கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு 400 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்தாண்டு ஒரு கரும்பின் வி லை 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையானது. இந்த ஆண்டு 25 - 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
அதேபோல், 10 செடிகள் கொண்ட மஞ்சள் கொத்து 50 முதல் 70 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு செடி மஞ்சள் கொத்து 20 - 50 ரூபாய் வரையும், இஞ்சி கொத்து ஒன்று 30 - 50 ரூபாய் வரையும் விற்பனையானது.
மற்ற காய்கறிகள் வரத்தும் அதிகமாக இருந்தது. அதேநேரம், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் வருகை குறைவாக இருந்ததால், காய்கறி விற்பனை மந்தமாக உள்ளது.
இது குறித்து சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முத்துகுமார் கூறுகையில், 'கோயம்பேடு சந்தையில் பொங்கல் படையலுக்கான சிறப்பு காய்கறிகள் 4,000 டன் வந்துள்ளன. பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் செல்கின்றனர்.
இதனால், வரத்து அதிகம் இருப்பினும், விற்பனை மந்தமாக உள்ளது' என்றார்.

