/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரதமர் உருவத்துடன் பொன்னாடை தயாரிப்பு
/
பிரதமர் உருவத்துடன் பொன்னாடை தயாரிப்பு
ADDED : நவ 19, 2025 04:27 AM

அனகாபுத்துார்: கோவையில் நடக்கவுள்ள, விவசாயிகள் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடிக்கு பரிசளிப்பதற்காக வாழை நார் - பட்டு துணியில் பிரத்யேகமாக பொன்னாடை தயாரிக்கப்பட்டு உள்ளது.
தென் மாநில இயற்கை விவசாயிகள் சங்கமம் நிகழ்ச்சி, கோவை மாவட்டம், கொடிசியா மைதானத்தில் இன்று முதல் 21ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
விவசாயம், அதை சார்ந்த பொருட்களின் கண்காட்சி அமைக்கப்படுகிறது.
இதில், அனகாபுத்துார் இயற்கை நார் நெசவு குழுமமும் அரங்கு அமைக்கிறது. அரங்கில், தாங்கள் தயாரிக்கும் பொருட்களை காட்சிப்படுத்த உள்ளது. இங்கு வைப்பதற்காக, வாழை நார் - பட்டு துணியில், பிரதமர் மோடியின் உருவம் நெய்யப்பட்ட பிரத்யேக பொன்னாடையை தயாரித்துள்ளது.
விவசாயிகள் சங்கமம் நிகழ்ச்சியில், அரங்குகளை பார்வையிட வரும் பிரதமர் மோடிக்கு, பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பொன்னாடையை அன்பளிப்பாக வழங்க உள்ளோம் என, நெசவு குழுமத்தின் நிர்வாகி 'வாழை' சேகர் தெரிவித்துள்ளார்.
அவரது தொடர்பு எண்: 98415 41883.

