/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பணம் அனுப்பினால் ஆபாச வீடியோ: துணை நடிகரிடம் ஆன் லைன் ஆப் மூலம் நுாதன மோசடி

ADDED : பிப் 04, 2024 05:40 AM
வியாசர்பாடி: சென்னை, வியாசர்பாடி, பள்ள தெருவை சேர்ந்தவர் தாமோதரன் கண்ணன், 24; சினிமா துறையில் துணை நடிகராக உள்ளார். இவர் கடந்த ஒரு மாதமாக 'சே ஹாய்' என்ற ஆன்லைன் ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வந்தார்.
அதில் அகிலா என்ற பெண் குறுந்தகவல் மூலம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். மேலும், தனக்கு பணம் அனுப்பினால் ஆபாச வீடியோக்கள் அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய தாமோதர கண்ணன் 1000 ரூபாய் அனுப்பினார். பின் அகிலாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம், ஒரு நபர் தாமோதரன் கண்ணன் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தான் சைபர் கிரைம் போலீஸ் எனக்கூறியதோடு, அகிலா என்ற பெண்ணை தற்கொலை செய்து கொண்டதாகவும், அதற்கு நீங்கள் அவர்களிடம் தவறாக பேசி பணம் அனுப்பியது காரணம் தான் என்றும் மிரட்டியுள்ளார்.
மேலும் இதுகுறித்து வழக்கு போடாமல் இருக்க 60 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய தாமோதரன், 13,000 ரூபாயை அந்த நபரின் ஜி பே எண்ணிற்கு அனுப்பியுள்ளார். பின் அந்த நபரின் மொபைல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அந்த எண் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தாமோதரன் கண்ணன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.