/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துறைமுக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
/
துறைமுக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
துறைமுக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
துறைமுக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்
ADDED : மே 23, 2025 12:28 AM
சென்னை,வாகன நிறுத்தக் கட்டண பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டதால், சென்னைத் துறைமுகத்தில், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் மூன்று நாட்களாக நடத்தி வந்த போராட்டம், நேற்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில் உள்ள,12 சங்கங்கள் அடங்கிய, அனைத்து துறைமுக டிரைலர் கூட்டமைப்பு நிர்வாகி மனோகரன் அளித்த பேட்டி:
சென்னை துறைமுகத்தில், 'பார்க்கிங் பிளாசா' உருவாக்கப்பட்டுள்ளது. அதில் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணத்தை, டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் தரும் நிலை ஏற்பட்டது.
மூன்று கட்ட பேச்சு நடந்தும் தீர்வு கிடைக்காததால், வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினோம். நேற்று மூன்றாவது நாளாக போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் பணிபுரியும், கன்டெய்னர் பிரைட் ஸ்டேஷன், சென்னை கஸ்டம்ஸ் புரோக்கர் அசோசியேஷன், நேஷனல் கன்டெய்னர் பிரைட் ஸ்டேஷன் ஆகிய, சரக்கு ஏற்றும் பணியை தரும் சங்கங்களை அழைத்து பேச்சு நடத்தினோம்.
'துறைமுக நிர்வாகத்தினர், டிரெய்லர் உரிமையாளர்கள் யாரும் கட்டணம் தர மறுக்கின்றனர். எனவே, நீங்கள் கட்டணத்தை தர வேண்டும்' என, கேட்டுக் கொண்டோம்.
எங்கள் கோரிக்கையை, சரக்கு ஏற்றும் பணியை தரும் நிறுவனங்களே ஏற்றுக் கொண்டன. இதனால், வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடுகிறோம்.
மூன்று நாட்களாக தொடர்ந்த வேலை நிறுத்தத்தால், சென்னை துறைமுகத்திற்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது.
இவ்வாறு, அவர் கூறினார்.