/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போரூர் ஏரிக்கரை ரூ.5.70 கோடியில் சீரமைப்பு பணி
/
போரூர் ஏரிக்கரை ரூ.5.70 கோடியில் சீரமைப்பு பணி
ADDED : மார் 19, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முகலிவாக்கம், ஆலந்துார் மண்டலம், முகலிவாக்கம், 156வது வார்டுக்கு உட்பட்ட போரூர் ஏரிக்கரை 3.5 கி.மீ., துாரம் உடையது.
இந்த கரைகளை பலப்படுத்தி, நடைபயிற்சிக்கு பாதை உள்ளிட்ட வசதி ஏற்படுத்த, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சி.எம்.டி.ஏ., மற்றும் மாநகராட்சி நிதியில் ஏரிக்கரையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 5.7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
ஏரிக்கரையை பலப்படுத்தி நடைபாதை, தடுப்பு, விளக்குகள், இருக்கை வசதி அமைக்கப்படுகிறது. சில மாதங்களில் இப்பணிகள் முடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.