ADDED : பிப் 21, 2024 01:40 AM
அ நிறம் | அளவு
சென்னை:அஞ்சல் துறையின், 'யுனிவர்சல் போஸ்டல் யூனியன்' சார்பில் சர்வதேச கடிதம் எழுதும் போட்டி, சென்னை தலைமை அஞ்சலகத்தில் நடந்தது.
இதில் மூன்றாம் இடம் பிடித்த, சென்னை, கோபாலபுரம் எம்.டபிள்யு.ஏ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜப்பீராவுக்கு, 5,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழை, அஞ்சல் துறை தலைமை இயக்குனர் ஸ்மிதா குமார் வழங்கினார்.
மேலும், ஆதாரில் மொபைல் போன் எண்ணை இணைக்கும் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட டெலிவரி ஊழியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு அஞ்சல் வட்டம், சென்னை நகர மண்டலத்தில், விபத்தில் உயிரிழந்த டாடா ஏ.ஐ.ஜி., நிறுவன காப்பீட்டுதாரரான புருஷோத்தமன் என்பவரின் குடும்பத்தினருக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.
