/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் தேர்வு முகாம்
/
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்கள் தேர்வு முகாம்
ADDED : மே 27, 2025 01:02 AM
சென்னை, சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக, புதிதாக முகவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கல்வி தகுதியாக, குறைந்தது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதிற்கு மேல் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்போர் விண்ணப்பிக்கலாம்.
இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்போர், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.
தகுதியுடையோர், முன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், அசல் மற்றும் இரண்டு நகல், வயதுச் சான்று, முகவரிச் சான்று மற்றும் கல்விச் சான்று ஆகியவற்றை நேர்காணலின் போது கொண்டு வர வேண்டும்.
முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுவோர் வசூலிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில், ஊக்கத் தொகை வழங்கப்படும்.
விருப்பமுள்ளோர், எண்: 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை - -17 என்ற முகவரியில் உள்ள சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 29ம் தேதி, காலை 10:00 மணிக்கு நடக்கும் நேர்காணலில் பங்கேற்கலாம் என, அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.