/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடை உரிமையாளர் தாக்கியதில் ஊழியர் பலி காட்டி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை
/
கடை உரிமையாளர் தாக்கியதில் ஊழியர் பலி காட்டி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை
கடை உரிமையாளர் தாக்கியதில் ஊழியர் பலி காட்டி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை
கடை உரிமையாளர் தாக்கியதில் ஊழியர் பலி காட்டி கொடுத்த பிரேத பரிசோதனை அறிக்கை
ADDED : ஏப் 26, 2025 12:26 AM
அம்பத்துார்,அம்பத்துார் அடுத்த சூரப்பட்டு, சிவபிரகாசம் நகரைச் சேர்ந்தவர் முருகேஷ், 57. இவர், அதே பகுதியில் 'பெட்' கிடங்கு மற்றும் கடை நடத்தி வருகிறார்.
இவரிடம் பணிபுரியும், அதே பகுதியைச் சேர்ந்த சையது காதர், 42, மற்றும் பிரேம் குமார், 47, ஆகியோர், லோடு ஆட்டோவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, பெட் விற்பனை செய்து வந்தனர்.
கடந்த 15ம் தேதி விற்பனை முடிந்து இருவரும் கடைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், திடீரென சையது காதர் மயக்கமடைந்துள்ளார்.
சக ஊழியர்கள் அவரை, அம்பத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் வரும் வழியிலேயே அவர் இறந்தது தெரிய வந்தது. அம்பத்துார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
உடலில் வெளிக்காயம் இல்லாததால், சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிந்த அம்பத்துார் போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், சையது காதரின், பின் பக்க தலையில் உள்காயம் இருப்பதாகவும், அதன் காரணமாகவே, சையது காதர் உயிரிழந்ததாகவும் தெரிய வந்தது.
பின், கிடங்கு உரிமையாளரான முருகேஷை அழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அதில், விற்பனை செய்யப்பட்ட பெட்களின் கலெக்ஷன் பணத்தில் 6,500 ரூபாயை, சையது காதர் குறைவாக கொடுத்ததால், கடையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து, சையது காதரை முருகேஷ் தாக்கி உள்ளார். இதில் அவர் இறந்தது தெரியவந்தது. முருகேஷ், அவரது மகன் உட்பட ஆறு பேரை, அம்பத்துார் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.