UPDATED : செப் 19, 2026 05:58 PM
ADDED : செப் 19, 2026 05:33 PM
சென்னை:போத்தனுாரில் இருந்து பீஹார் மாநிலம் பாருனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
★ கோவை மாவட்டம் போத்தனுாரில் இருந்து வரும் அக்., 4, 11, 18, 25, நவ., 1ம் தேதிகளில் காலை 6:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் பாருனிக்கு செல்லும்
★ பாருனியில் இருந்து வரும் அக்., 7, 14, 21, 28, நவ., 4ம் தேதிகளில் காலை 10:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அடுத்த மூன்றாவது நாளில் மாலை 6:30 மணிக்கு போத்தனுார் செல்லும். இந்த சிறப்பு ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை பெரம்பூர் வழியாக இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட சிறப்பு ரயில்களில் இன்று காலை 8:00 மணிக்கு தொடங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
