/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீரமைத்த சாலையில் மீண்டும் பள்ளம்
/
சீரமைத்த சாலையில் மீண்டும் பள்ளம்
ADDED : மே 08, 2025 12:17 AM

அசோக் நகர், கோடம்பாக்கம் மண்டலம், 131வது வார்டு அசோக் நகரில் டாக்டர் சுப்பராயன் நகர் நான்காவது தெரு அமைந்துள்ளது.
இத்தெருவின் ஒரு பகுதியில், சில மாதங்களுக்கு முன், கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.
இதையடுத்து குடிநீர் வாரியம், குழாயை சீரமைத்தது. மூன்று மாதங்களுக்கு முன், இப்பணிகள் முடிக்கப்பட்டன. தற்போது, அதே சாலையில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு, குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்தது.
இந்நிலையில், இந்த சாலையின் மற்றொரு பகுதியில், பாதாள சாக்கடை மேல் மூடி அருகே, சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கு பள்ளம் தோண்டி, கழிவுநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஒரே சாலையில், சில மாதங்களாக அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு வருவதால், அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.