/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் நிறுத்தம் அருகே பள்ளம் ஐ.சி.எப்.,பில் பயணியர் பீதி
/
பஸ் நிறுத்தம் அருகே பள்ளம் ஐ.சி.எப்.,பில் பயணியர் பீதி
பஸ் நிறுத்தம் அருகே பள்ளம் ஐ.சி.எப்.,பில் பயணியர் பீதி
பஸ் நிறுத்தம் அருகே பள்ளம் ஐ.சி.எப்.,பில் பயணியர் பீதி
ADDED : மார் 19, 2024 12:16 AM

ஐ.சி.எப்., மின்வாரிய பணிக்காக ஐ.சி.எப்., பேருந்து நிறுத்தத்தில் தோண்டிய பள்ளத்தால், பயணியர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.
வில்லிவாக்கம், எம்.டி.எச்., சாலை அருகில், ஐ.சி.எப்., பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, 'தடம் எண் '71சி, 71டி, 71இ, 71எப், 71எச்' உள்ளிட்ட மாநகர பேருந்துகள் நின்று செல்லும்.
தினமும் ஏராளமானோர், இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிறுத்தம் உள்ள சாலையோரத்தில், கடந்த சில நாட்களாக மின்வாரிய பணிகள் நடக்கின்றன.
அதற்காக, சாலையோரங்களில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தற்போது, பேருந்து நிழற்குடையை சுற்றி விபத்து ஏற்படும் வகையில், பள்ளம் தோண்டி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
இது குறுகிய சாலை என்பதால், பயணியர் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் நிலவுகிறது. அதேபோல் நிழற்குடையும் சரிந்து விழ வாய்ப்புள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

