ADDED : நவ 23, 2026 06:43 PM

அ நிறம் | அளவு
கே.கே.நகர்: மின் வாரிய ‘கேங்மேன்’ பணியாளர்கள் அனைவரையும், கள உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்யக்கோரி, கே.கே.நகர், திருமங்கலம் உள்ளிட்ட மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில், ஊழியர்கள் இன்று (நவ.,23), போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சி.ஐ.டி.யு., தென் சென்னை முதல் கிளை சார்பில் இந்த போராட்டம் நடந்தது.
இதில், ‘கடந்த மார்ச் 14ம் தேதி ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி, கேங்மேன் பணியாளர்கள் அனைவரையும் கள உதவியாளர்களாகப் பதவி மாற்றம் செய்ய வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.
