ADDED : டிச 31, 2025 03:57 AM
அ நிறம் | அளவு
சென்னை: திருவ ள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன் மூன்றாவது அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக நேற்று அதிகாலை, 2:22 மணிக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அங்கு மீண்டும் ஜன., 30ல் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
