/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நள்ளிரவில் தொடரும் மின் தடை வியாசர்பாடியில் சாலை மறியல்
/
நள்ளிரவில் தொடரும் மின் தடை வியாசர்பாடியில் சாலை மறியல்
நள்ளிரவில் தொடரும் மின் தடை வியாசர்பாடியில் சாலை மறியல்
நள்ளிரவில் தொடரும் மின் தடை வியாசர்பாடியில் சாலை மறியல்
ADDED : ஆக 10, 2025 12:22 AM
வியாசர்பாடி, வியாசர்பாடியில் மின் தடையை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வியாசர்பாடி, பி.வி.காலனி, சர்மா நகர், சஞ்சய் நகர், இந்திரகாந்தி நகர், சாஸ்திரி நகர், காந்தி நகர், எஸ்.ஏ.காலனி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர்.
இப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை மின் மாற்றியில் பழுது காரணமாக, மின் தடை ஏற்பட்டது.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நேற்று அதிகாலை 100க்கும் மேற்பட்டோர், வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள மின்வாரிய அலுவலகம் மற்றும் வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எம்.கே.பி.நகர் போலீசார், பொதுமக்களிடம் சமரசம் பேசியதையடுத்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.