தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான 'பவர் லிப்டிங்'

உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான 'பவர் லிப்டிங்'

உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான 'பவர் லிப்டிங்'


UPDATED : ஏப் 29, 2026 04:41 PM

ADDED : ஏப் 29, 2026 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 29, 2026 04:41 PM ADDED : ஏப் 29, 2026 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான 'பவர் லிப்டிங்' போட்டியில், வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

நவீன் ஜிம் சார்பில், உடற்பயிற்சி நிலையங்களுக்கு இடையிலான 'பவர் லிப்டிங்' போட்டி, அயனாவரத்தில் உள்ள நிலையத்தில் நடந்தது. இதில், சென்னையின் பல்வேறு இடங்களில் இயங்கும் தனியார் உடற்பயிற்சி கூடங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.

இருபாலருக்கும், ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ், டெட் லிப்ட் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளில், போட்டி நடைபெற்றது. 'எக்யூப்ட்' மற்றும் 'கிளாசிக்' என, இரண்டு விதங்களிலும், 'ஏ' மற்றும் 'பி' பிரிவுகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டனர்.

பெண்கள் பிரிவில், அண்ணா நகரை சேர்ந்த தீப்தி ராஜ், மொத்தம் 505 கிலோ எடையை துாக்கி, முதலிடத்தை பிடித்து கவனம் ஈர்த்தார்.

ஆண்கள் பிரிவில், போட்டி கடும் சவாலாக இருந்தது. 'எக்யூப்ட்' 'ஏ' பிரிவில், அம்பத்துார் பிரத், 'பி' பிரிவில் அம்பத்துார் நிரஞ்சன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

'கிளாசிக்' 'ஏ' பிரிவில், அயனாவரம் லிங்கேஷ், 'பி' பிரிவில் அம்பத்துார் யுவராஜ், ஆகியோர் முதல் இடங்களை கைப்பற்றினர். வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us