ADDED : செப் 08, 2026 08:14 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ‘பிரீமியம் பிராண்ட்’ உணவகத்தை, சென்னை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் செந்தில்குமார் நேற்று திறந்து வைத்தார்.
பயணியருக்கு நவீன, சுகாதாரமான முறையில் சைவ மற்றும் அசைவ உணவுகளை வழங்குவதற்காக, இந்த பிராண்டட் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் வாயிலாக, சென்னை ரயில்வே கோட்டத்துக்கு ஆண்டுக்கு, 61.21 லட்சம் ரூபாய் உரிமக் கட்டணமாகக் கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் மொத்தம், 3.25 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த முயற்சி பயணியரின் அனுபவத்தை மேம்படுத்துவதுடன், ரயில்வேயின் வருவாயையும் அதிகரிக்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
