பிரீமியம் விரைவு அஞ்சல் சென்னையில் சேவை துவக்கம்
பிரீமியம் விரைவு அஞ்சல் சென்னையில் சேவை துவக்கம்
ADDED : மார் 18, 2026 05:14 AM
சென்னை: சென்னையில் பிரீமியம் விரைவு அஞ்சல் சேவை துவக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையில் 24 மற்றும் 48 மணி நேரத்திற்குள், 'டெலிவரி' செய்யப்படும் புதிய பிரீமியம் விரைவு அஞ்சல் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆவணங்கள் அடுத்த நாளே, அதாவது 24 மணிநேரத்தில் வினியோகம் செய்யும் சேவைக்கான கட்டடணத்தில், உள்ளூர் சேவைகளுக்கு, 50 கிராம் வரை 38 ரூபாயும், 250 கிராம் வரை, 48 ரூபாயும், 500 கிராம் வரை, 56 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
பார்சல்கள் சேவைக்கு, குறைந்தபட்சமாக 500 கிராம் வரை 200 ரூபாயும், அதிகபட்சமாக 5 கிலோ வரை எடையை பொறுத்து, 990 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 48 மணிநேர வினியோகத்திற்கும் கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.
தாமதமான வினியோகத்திற்கு பணத்தைத் திரும்ப பெறும் வசதியும் உள்ளது என, அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
