/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரசிடென்சி கல்லுாரி தடகள அணி: 6வது டிவிஷன் கிரிக்கெட்டில் வெற்றி
/
பிரசிடென்சி கல்லுாரி தடகள அணி: 6வது டிவிஷன் கிரிக்கெட்டில் வெற்றி
பிரசிடென்சி கல்லுாரி தடகள அணி: 6வது டிவிஷன் கிரிக்கெட்டில் வெற்றி
பிரசிடென்சி கல்லுாரி தடகள அணி: 6வது டிவிஷன் கிரிக்கெட்டில் வெற்றி
ADDED : ஆக 11, 2025 01:53 AM
சென்னை:சென்னையில் நடந்து வரும், ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், பிரசிடென்சி கல்லுாரி தடகள அணி, 17 ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்களுக்கான ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள், சென்னையின் பல்வேறு கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம், அடையாறு, காந்தி நகர் தைதானத்தில் நடந்த போட்டியில், பாங்க் ஆப் இந்தியா ஸ்போர்ட்ஸ் அண்ட் ரீகிரியேஷன் கிளப் அணியும், பிரசிடென்சி கல்லுாரி தடகள அணியும் மோதின.
'டாஸ்' வென்ற பிரசிடென்சி கல்லுாரி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரரான ஹர்ஷத், 'டக் அவுட்' ஆக, பிரசன்னா - அருண்குமார் ஜோடி ரன் குவித்தது.
பிரசன்னா - 43, அருண்குமார் - 42 ரன்களில் ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்த வீரர்களும் வரிசையாக சரிய துவங்கினர். 29.2 ஓவர்களில் 156 ரன்கள் குவித்து, அந்த 'ஆல் அவுட்' ஆனது.
பின் 157 என்ற இலக்குடன் களம் இறங்கிய பாங்க் ஆப் இந்தியா அணிக்கு, துவக்க வீரர்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை.
அதிகபட்சமாக தீப்பன் கோஸ் - 26, நிஷாந்த - 25 ரன்களை எடுத்தனர். 30 ஓவர் முடிவில், ஒன்பது விக்கெட் இழப்பில் 139 ரன்களை மட்டும் எடுத்தது. பிரசிடென்சி கல்லுாரி தடகள அணி 17 ரன் வித்தியாசத்தில், போராடி வெற்றி பெற்றது.