/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரும்பு வேலி அமைத்து ஏரி ஆக்கிரமிப்பு தடுப்பு
/
இரும்பு வேலி அமைத்து ஏரி ஆக்கிரமிப்பு தடுப்பு
ADDED : நவ 04, 2024 05:06 AM

தரமணி:வேளச்சேரி - தரமணி ரயில் நிலையம் இடையே, கல்லுக்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியின் ஒரு பகுதி வழியாக, ரயில்வே தண்டவாளம் மற்றும் ரயில்வே சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால், ஏரி இரண்டு துண்டாக மாறியது. இதை பயன்படுத்தி, ஏரிக்கரையில் கட்டட கழிவுகள் கொட்டி ஆக்கிரமித்து வந்தனர். கடந்த இரு மாதங்களில், ரயில்வே சாலையை ஒட்டி வீட்டு மனை அமைக்கும் அளவுக்கு, ஆக்கிரமிப்பு அதிகரித்தது.
தொடர்ந்து நீர்வழிபாதையையும் சேர்த்து ஆக்கிரமித்தனர். இதன்காரணமாக, பருவமழையின்போது நீரோட்டம் தடைபட்டு, தரமணி பகுதியில் வெள்ள பாதிப்பு அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, நீர்நிலையில் கொட்டிய கட்டட கழிவுகள், மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டன. மீண்டும் கழிவுகள் கொட்டி ஆக்கிரமிக்காத வகையில், ரயில்வே சாலையை ஒட்டி, இரும்பு வேலி அமைக்கப்பட்டது.
இதனால், கனமழையின்போது நீரோட்டம் சீராக இருக்கும் என, அதிகாரிகள் கூறினர்.