/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் நிறுவன பஸ் மோதி புரோகிதர் பலி: 2 பேர் காயம்
/
தனியார் நிறுவன பஸ் மோதி புரோகிதர் பலி: 2 பேர் காயம்
தனியார் நிறுவன பஸ் மோதி புரோகிதர் பலி: 2 பேர் காயம்
தனியார் நிறுவன பஸ் மோதி புரோகிதர் பலி: 2 பேர் காயம்
ADDED : ஏப் 07, 2025 01:35 AM
காவேரிப்பாக்கம்: சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் புரோகிதர் சாய்ராம், 45. இவர், தன் மைத்துனர் கண்ணன், 42, அவரது மகன் அர்ஜுன், 10, உள்ளிட்ட குடும்பத்தினர் ஆறு பேருடன் சென்னையில் இருந்து மைசூருக்கு நேற்று முன்தினம் இரவு டெம்போ வேனில் சுற்றுலா சென்றனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், காவேரிப்பாக்கம், ஓச்சேரி மேம்பாலம் அருகே சென்றபோது, வேன் டயர் வெடித்தது. டிரைவர் சுதாரித்து, வேனை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தினார். வேனில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பழுதான டயரை மாற்றும் பணியில் டிரைவர் ஈடுபட்ட போது சாய்ராம், கண்ணன் மற்றும் சிறுவன் அர்ஜுன், ஆகியோர் டிரைவருக்கு பாதுகாப்பாகவும், அவ்வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்கவும் சைகை காட்டிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து தனியார் நிறுவன தொழிலாளர்களை ஏற்றி வந்த பஸ், இந்த மூவர் மீதும் மோதியதில், சாய்ராம் பலியானார். கண்ணன், அர்ஜுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

