ADDED : நவ 17, 2026 07:34 PM
அ நிறம் | அளவு
வேளச்சேரி: வேளச்சேரியில் தாயிடம் செலவுக்கு பணம் கேட்டு கிடைக்காததால், மனமுடைந்த கோவில் பூசாரி வேல்முருகன், 23, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேளச்சேரி, திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன், 23. அருகே உள்ள அம்மன் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். இவர், அடிக்கடி தாயிடம் செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். பணம் தர மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில், நேற்று தாயிடம் பணம் கேட்டபோது கிடைக்காததால் மனமுடைந்த வேல்முருகன், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேளச்சேரி போலீசார், பணப் பிரச்னையா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.
