/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆரம்ப சுகாதார மைய புது கட்டட பணி துவக்கம்
/
ஆரம்ப சுகாதார மைய புது கட்டட பணி துவக்கம்
ADDED : மார் 14, 2024 12:26 AM

எண்ணுார்,எண்ணுார், கத்திவாக்கம் பஜாரில், ஆரம்ப சுகாதார மையம் இயங்கி வந்தது. இங்கு, எண்ணுாரின் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள், மருத்துவ சேவை பெற்று வந்தனர்.
மேல் சிகிச்சைகளுக்காக, எண்ணுார் மக்கள் அவசர மருத்துவ சேவைகளுக்கு, திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனை மற்றும் ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருப்பதால், நேர விரயம், சிகிச்சையில் தாமதம் ஏற்படுவதாக, எண்ணுார் மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதையடுத்து மாநகராட்சி பட்ஜெட்டில், 'பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் எண்ணுார் முகத்துவார பகுதியை ஒட்டிய மக்களுக்கு, கத்திவாக்கம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், உயர்தர சிகிச்சையளிக்க 3 கோடி ரூபாய் செலவில், 10 படுக்கைகளுடன் மேம்படுத்தப்படும்' என, மேயர் பிரியா அறிவித்தார்.
இந்நிலையில், புதிய கட்டடப் பணிகளுக்கு ஏதுவாக, ஆரம்ப சுகாதார மையம், 100 மீட்டர் தொலைவில் உள்ள நடுநிலைப் பள்ளி கட்டடத்திற்கு, தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பழைய ஆரம்ப சுகாதார மைய கட்டடத்தை இடிக்கும் பணியும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில், புதிய கட்டடத்தின் கட்டுமான பணிக்கு, அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

