/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரும் 15ல் பிரைம் வாலிபால் 'லீக்'
/
வரும் 15ல் பிரைம் வாலிபால் 'லீக்'
ADDED : பிப் 01, 2024 12:13 AM
சென்னை பிரைம் வாலிபால் லீக் 3-வது சீசன், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 15ம் தேதி துவங்கி மார்ச் 21ல் நிறைவடைகிறது. தொடரில், நடப்பு 'சாம்பியன்' அகமதாபாத் டிபன்டர்ஸ், பெங்களூரு டார்படோஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை பிளிட்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், கோல்கட்டா தண்டர்போல்ட்ஸ், மும்பை மீட்டியார்ஸ் அணிகளுடன், டில்லி டூபான்ஸ் அறிமுக அணியாக களமிறங்குகிறது.
புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடிக்கும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், 'எலிமினேட்டர்' சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக, இறுதிப்போட்டிக்குள் தகுதிபெறும். இறுதிப் போட்டி, மார்ச் 21ல் நடக்கும் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.